×

கொரோனா தடுப்பு மருந்து...: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனா தடுப்பூசி மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்ய பல்கலை அறிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு வரும். அந்த வகையில் பல கொரோனாவுக்கான மருந்துகளும் சோதனைக் கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த சொசோனோவ் பல்கலைக்கழகம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையம்  என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அந்த பல்கலைக்கழகத்தின் இயக்குனர், இதன்மூலம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக கூறியுள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி இதற்கான சோதனை தொடங்கப்பட்டதாகவும், இவை வெற்றிபெற்றதால் முதல் குழுவினர் நாளை மறுநாளும், இரண்டாம் குழுவினர் 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர் என்றும் அவ தகவல் தெரிவித்துள்ளார். இந்த மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் உலகில் உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொரனோ வைரசை வீழ்த்திவிடலாம் என்று நம்பப்படுகிறது. ரஷ்யாவின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags : university ,Russian ,Corona , Corona, Preventive Medicine, Humans, Trial, Russia, University
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த...