×

மருத்துவ முகாம்

பொன்னேரி: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும், அவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. வீடு தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி, கடலி கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : camp , medical, camp
× RELATED சோதனைச்சாவடியில் ஒற்றை யானை முகாம்