×

ஜார்க்கண்ட்டில் 12 அரசு கட்டிடத்தை தகர்த்த மாவோயிஸ்ட்

சாய்பாசா: ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தின் பெர்கேலா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வனத்துறை அலுவலக கட்டிடத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்ட்கள் நுழைந்தனர். ஆயுதங்கள் வெடி பொருட்கள் வைத்திருந்த அவர்கள், அங்கிருந்த ஊழியர்களை வெளியேறுமாறு அடித்து விரட்டினர். பின்னர் 12 வனத்துறை அலுவலகங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெடி வைத்து தகர்த்தனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரிக்கின்றனர். வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

Tags : government buildings ,Jharkhand ,Maoists , Jharkhand, 12 Government Building, demolished, Maoist
× RELATED ஜார்க்கண்டில் 12 மற்றும் 10-ம் வகுப்பு...