7 நாளில் குணமாகி வீடு திரும்பலாம்: டாக்டர் பார்த்திபன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணை இயக்குநர்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சித்த மருத்துவத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் சுடு தண்ணீரில் உப்பு போட்டு வாயை கொப்புளிக்க வேண்டும். அதன்பிறகு சித்தாவில் திருமூலர் சொல்லக்கூடிய யோகசனங்கள், பிராணயாமம் மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாவது நடைபயிற்சி வெயிலில் உடல் படும் படி நடைபயிற்சி செய்ய வேண்டும். அதை தொடர்ந்து எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி சாறு போன்ற பழச்சாறு வழங்கப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து கொரோனா வைரசுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய கபசுரக்குடிநீர் வழங்கப்படுகிறது.

மேலும் காலையில் இயற்கை உணவாக கம்பு, திணை, கேழ்வரகு, சுண்டல், அவல் போன்ற இயற்கை உணவுகள் வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து மறுபடியும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பழச்சாறு வழங்கப்படுகிறது. அதன்பிறகு மதிய உணவாக அரிசி சாதத்தை தவிர மற்றபடி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள், காய்கறிகள் வழங்கப்படுகிறது. மேலும் மாலையில் சுண்டல் போன்று ஏதாவது ஒரு பயிறுகள் உணவுகளாக வழங்கப்படுகிறது. மீண்டும் மாலை நேரத்தில் கபசுரக்குடிநீர் வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் 240 படுக்கைகள் கொண்ட சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று 30க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும். அதைப்போன்று கண்டோன்மெண்ட் பகுதியில் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் மற்றும்  மற்ற கண்டோன்மெண்ட் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்திய மருத்துவதுறை சார்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வியாசர்பாடியில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை முகாம் இதில் எந்த விதமான அலோபதி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கவில்லை. தலைவலி, காய்ச்சல், இருமல் அனைத்திற்கும் சித்த மருத்துவம் தான் பயன்படுத்தப் படுகிறது. இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இதேபோன்று சிறப்பு முகாம்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி வேலூர் 140 படுக்கைகள், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 212 படுக்கைகள், கோவையில் கோவிட் கேர் சென்டர் கொடீசியா மைதானத்தில் சிறப்பு முகாம்கள் செயல்படுகிறது.

மேலும் விரைவில் திருச்சி, தேனி, மதுரையில் இந்த வாரத்திற்குள் சித்தா சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகிறது. சித்த மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களுக்கு  4 நாட்களில் குணமடைகின்றனர். ஆனால் உடனடியாக அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதில்லை 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை முழுவதும் குணமடைந்த பிறகு எந்தவிதமான  அறிகுறிகள் இல்லாமல் மற்றவர்களுக்கு பரவாத நிலையில் தான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். மேலும் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது.

அதாவது ஒரு பகுதியில் 10 வீட்டிற்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதியில் உள்ள மற்ற வீடுகளுக்கும் முன்கூட்டியே வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கப்படுகிறது.  உடல் வன்மை பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு பகுதியில் 10 வீட்டிற்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்தால் மற்ற வீடுகளில் உள்ளவர்களுக்கும் அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

* அறிவியல் ஆய்வுகள் இல்லாதது சித்தா:  டாக்டர் அருணாச்சலம், இந்திய மருத்துவ சங்கம் முன்னாள் தலைவர்

ஆதாரங்களுடைய நவீன மருத்துவ அறிவியல் தான் அலோபதி (ஆங்கில மருத்துவம்) எனப்படுகிறது. இந்த மருவத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளை எம்.பி.பி.எஸ் படிக்கும் அல்லது படித்து முடித்த மருத்துவர்கள் மட்டும் கண்டுபிடிப்பதில்லை. இந்த மருந்துகள் பல வருடங்களாக ஆய்வு செய்யப்பட்டு, தேடி கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை கண்டு பிடிப்பவர்கள், தாவரவியல் படித்தவர்களாக இருக்கலாம், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களாக இருக்கலாம், கெமிஸ்ட்ரி படித்தவர்களாக இருக்கலாம். இவர்களிடம் டாக்டர்கள் உடலில் என்ன பிரச்னைகள் உள்ளதோ அதற்கான தேவைகளை மட்டும் தான் சொல்லுவார்கள், அதனை தான் இவர்கள் கண்டுபிடிப்பார்கள். அதனை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஆனால் சித்த வைத்தியம் அப்படியில்லை சித்தர்கள் எழுதி வைத்ததை வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். மருத்துவர்களே மருந்து கண்டுபிடிக்கின்றனர். அப்போது என்ன கொடுக்கப்பட்டதோ, அதே தான் இப்போவும் கொடுக்கப்படுகிறது.

இப்போ இருக்கும் சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களுக்கு நவீன உலகத்தில் இருக்கும் நோய்களை உடல்மாற்றங்களைப் பற்றிய புரிதல் இல்லை. எனவே தான் அவர்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை துறை என்று கிடையாது, தெரியாது. தற்போது, நோய் எதிர்ப்பு சக்தி என்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு கபசுர குடிநீர் பரிந்துரை செய்து கொடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஐ.சி.எம்.ஆர் வழி காட்டுதலின்படி செயல்பட்டு வருகின்றது.

கபசுரகுடிநீரை ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்யவில்லை. இதனால் மத்திய அரசும் ஆயுர்வேத மருத்துவத்துடன் நிற்கவில்லை. இதற்கு உதாரணம் கபசுர குடிநீர், தமிழகத்தை தவிர வேறு எங்கும் கொடுக்கவில்லை. 3 நூற்றாண்டுகளாக விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது அலோபதி. உலக நாடுகள் ராணுவத்துக்கும், விண்வெளி ஆராய்ச்சிக்கும் உலக நாடுகள் செய்யும் செலவில், நோய்கள் பற்றி ஆய்வு செய்ய மருந்து கண்டுபிடிப்பதற்கு எந்த நாடும் செலவு செய்வதில்லை. உதாரணமாக உலக சுகாதார நிறுவனம், உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால், அதில் தலைமை வகிப்பவர் எம்.பி.பி.எஸ் படிக்காத ஒருவராக உள்ளார். அதை ஒரு அரசியலாக தான் பார்க்க வேண்டும். அந்த பதவியில் ஒரு மருத்துவர் இருந்தால், அவர் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும்.

அமெரிக்காவில் எப்.டி.ஏ அனுமதி அளித்தால் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும். அனுமதி கொடுக்காத எந்த ஒரு உணவு பொருளும் விற்க முடியாது. அமெரிக்காவில் 135 ஆயுர்வேத மருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஆயுர்வேத மருந்துகளில் காப்பர், துத்தநாகம் உள்ளிட்ட மெட்டல்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு ஆயுர்வேதம் அளித்த விளக்கம், அந்த சட்டியில் தான் செய்கிறோம். அதனால் மெட்டல் உள்ளது என்று கூறினர். மெட்டல் கிட்னியை பாதிப்படைய செய்யும். இதனால் தான் ஓமியோபதியின் ஆர்சனிக் பயன்படுத்த வேண்டாம் என்று கூறுகிறோம். தர கட்டுபாடு, அமெரிக்காவில் உள்ளது. ஆனால் நம் இந்தியாவில் அப்படி ஒரு தர கட்டுப்பாடு இல்லை. அலோபதி ஆராய்ச்சிகள் மூலம் நவீன மருத்துவம் வளர்ச்சிக்கு ஏற்ப, முன்னேறி கொண்டே இருக்கிறது.

ஆனால் சித்தா அப்படியில்லை தற்போது எதையாவது கொடுக்கணுமே என்று கபசுர குடிநீரை அரசு கொடுக்கிறது. 85 சதவீதம் பேருக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் வீட்டிலேயே சரியாக கூடிய ஒன்று தான் இந்த கொரோனா. மற்ற 15 சதவீதம் பேர் அதிகமாக பாதிக்கப்பட்டு, அதில் 3 சதவீதம் பேர் தான் இறக்கின்றனர். அவர்களையும் காப்பாற்ற தான் அலோபதி மருத்துவர்கள் ஐசியூவில் போராடுகிறார்கள். ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் அப்படி கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி நிலையானது இல்லை மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு மருந்துகள் எதுவும் கிடையாது. மேலும் உணவு பழக்கங்கள் மூலம் ஒருநாளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியாது. 85 சதவீதம் பேருக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் வீட்டிலேயே சரியாக கூடிய ஒன்று தான் இந்த கொரோனா. மற்ற 15 சதவீதம் பேரையும் காப்பாற்ற தான் அலோபதி மருத்துவர்கள் ஐசியூவில் போராடுகிறார்கள்.

Related Stories:

>