×

எந்த டிவி மூலம் வகுப்பு நடத்தப்படும்? கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: மாணவர்களுக்கு டிவி மூலம் பாடங்கள் நடத்தப்பட உள்ள 6 அலைவரிசைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 2020-2021ம் கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் தற்போது அச்சிட்டு வினியோகம் செய்யும் பணி தொடங்க உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு நாளை இந்த புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பாடங்களை டிவி மூலம் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. நாளை தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிவி மூலம் பாடங்கள் நடத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கல்வித்தொலைக் காட்சியில் அந்தந்த பாடங்களின் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிகழ்வுகள் ஒளிப்பாகும். அதை மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பார்த்து கற்றல் அனுபவங்களை பெற  முடியும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கல்வித்தொலைக் காட்சியில் தினமும் காலையில் 7 மணி முதல் இரவு 9 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 10ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிப்பரப்பப்படும்.

இதை மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே டிவியில் பார்த்து கற்க முடியும். இந்த வகுப்புகள் குறிப்பிட்ட சில அலைவரிசைகளில் மட்டுமே தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகும். இதன்படி,  l TACTV(தமிழ்நாடு அரசு கேபிள் டிவி) அலைவரிசை எண் 200, l  SCV-98 l TCCL-200 l VK DIGITAL-55 * AKSHAYA CABLE -17 l YOUTUBE-shorturl.at/pjkv0 ஆகிய அலைவரிசைகளில் ஆசிரியர்கள் நேரடியாக பாடங்களை நடத்துவதை மாணவர்கள் பார்த்து கற்கலாம்.

Tags : Department of Education Notice ,Education Department , TV, Class, Department of Education, Announcement
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...