×

இடியும் நிலையில் கால்நடை மருத்துவமனை கட்டிடம்: அகற்ற கோரிக்கை

பெரியகுளம்: பெரியகுளத்தில் சேதமடைந்த கால்நடை மருத்துவமனையை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்காக அப்பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் உரிய பராமரிப்பில்லாததால் கால்நடை மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பயன்பாடில்லாததால் தற்போது கால்நடை மருத்துவமனை வளாகம் புதர் மண்டி காணப்படுவதுடன், அப்பகுதியை சேர்ந்த ‘குடிமகன்களுக்கு’ இரவு நேர பாராக பயன்பட்டு வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளிக்க முடியாமல் அவற்றின் உரிமையாளர்கள் சிரமமடைகின்றனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Veterinary Hospital Building , Veterinary Hospital Building
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி