×

கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல, கிருமி ஞானம்; தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா: 68 பேர் பலி...தமிழக சுகாதாரத்துறை..!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,38,470-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,20,916-லிருந்து 8,49,553-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,123-லிருந்து 22,674-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386-லிருந்து 5,34,620-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 28,634 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 551 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19,235 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 89,532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3,617 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 1,966- ஆக உயர்ந்துள்ளது.

*  தமிழகத்தில் இன்று 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,168 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 77,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 105 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 58.93% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 42,369 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 4,231 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 84,535 ஆண்கள், 53,912 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
     
     ^ டெல்லி - 01

     ^ கேரளா - 07

     ^ கர்நாடகா - 06

     ^ தெலுங்கானா - 02

     ^ ஆந்திரப்பிரதேசம் - 01

     ^ பீகார் - 02

     ^ அசாம் - 01

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ சவூதி அரேபியா - 08

     ^ கெய்கிஸ்டான் - 05


Tags : Corona ,holiday celebration ,Tamil Nadu ,Tamil Nadu Health Department , Corona, Tamil Nadu, Corona, Tamil Nadu Health Department
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...