×

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,235-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சோதனையில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் உள்ள மொத்த எண்ணிக்கை 1,194-ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான வித்தியாசம் 2,42,362-ஆக உள்ளது எனவும் கூறியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊடரங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் 5-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தபோது, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,20,916-லிருந்து 8,49,553-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,123-லிருந்து 22,674-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386-லிருந்து 5,34,620-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 28,634 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 551 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19,235 பேர் குணமடைந்துள்ளனர்.


Tags : Corona ,India ,Ministry of Health Coronal Rise ,Ministry of Health , Ministry of Health, India
× RELATED இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 64.51%ஆக உயர்வு