×

போர் நிறுத்தம் என்ற பெயரில் தாய் மண்ணை சீனா ஆக்கிரமித்துவிட்டதா? எல்லையில் நடப்பது என்ன?: மத்திய அரசுக்கு ராகுல் சரமாரி கேள்வி

லடாக்: லடாக்கில் போர் நிறுத்தம் என்ற பெயரில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதா? அங்கு என்ன நடக்கிறது? இந்திய மண்ணைவிட்டு சீன ராணுவம் வெளியேற மறுப்பது உண்மையா? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தாய் மண்ணை சீனாவிடம் மோடி அரசு தாரைவார்த்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, லடாக்கில் என்ன நடக்கிறது என்று வினவியுள்ள ராகுல் காந்தி, அங்கு இருதரப்பிலும் மேற்கொண்டுள்ள போர் நிறுத்த நடவடிக்கை இந்தியாவுக்கு பாதகமாக இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

எல்லையில் 1597 கிலோ மீட்டர் தூரமுள்ள சர்ச்சைக்குரிய இடங்களில் இந்தியா - சீனா ராணுவம் இடையே 4 இடங்களில் நேருக்கு நேர் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள சமரச நடவடிக்கையின் எதிரொலியாக இருதரப்பினரும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங் ஏரி உள்ளிட்ட இடங்களில் வெளியேற மறுத்து சீனா ராணுவம் ஆக்கிரமித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். போர் நிறுத்த நடவடிக்கையில் சர்ச்சைக்குரிய இடம் விரிவுபடுத்தப்பட்டு இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் மேற்கோள்காட்டி வினவியுள்ளார்.

Tags : government ,China ,ceasefire ,Thai ,Rahul ,border , Ceasefire, China, border, federal government, Rahul
× RELATED கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல்...