×

கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிட ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது என கூறினார். மேலும் 43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 23,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். எனவே மீதமுள்ள கருவிகள் ஒரு சில தினங்களில் வாங்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Vijayabaskar ,Chief Minister ,corona patients , Chief Minister instructs, corona patients , more pulse oximeters, Health Minister Vijayabaskar
× RELATED மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல்...