×

ஊரடங்கு காலத்தில் நடவடிக்கை டிஆர்ஓ உத்தரவுக்கு இடைக்காலத்தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை:  ஊரடங்கு காலத்தில் சிவில் பிரச்னையில் விசாரணையின்றி உத்தரவிட்ட டிஆர்ஓவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுவதாகக் கூறி, ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது.  திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) அய்யனாரப்பன். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  எனது தந்தை சண்முகசுந்தரம். இவரை எங்களது தாத்தா-பாட்டி தத்ெதடுத்து வளர்த்தனர். என் தாத்தாவுக்கு பங்காக வழங்கப்பட்ட சொத்து இருந்தது. அவருக்கு பிறகு அந்த சொத்தை எனது பாட்டி பராமரிக்கும் உரிமை இருந்தது. இதனிடையே, எனது தாத்தாவிற்கான சொத்தை சிலர் கிரையம் செய்துள்ளதாக ஆவணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சப்-கோர்ட்டில் எங்களது பாட்டி வழக்கு தொடர்ந்ததில் ஆதரவாக 1952ல் தீர்ப்பானது. இதை எதிர்த்த வழக்கை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. சொத்துக்கள் எனக்கு சொந்தம் என்பதால், எங்கள் பெயருக்கு மாற்ற வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து எதிர்தரப்பினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (டிஆர்ஓ) சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அவர் விசாரிக்காமல் வருவாய் கோட்டாட்சியரின் நடவடிக்கைக்கு தடை விதித்து கடந்த ஏப்.22ல் உத்தரவிட்டார். சட்ட விரோதமான அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சி.சரவணன் விசாரித்து, கொரோனா ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள டிஆர்ஓவின் உத்தரவு பலவித சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, அவரது உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதித்து, 4 வாரம் தள்ளி வைத்தார்.



Tags : curfew , Curfew, tiaro order, injunction, High Court Branch
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்