×

சுருக்குமடி வலையால் பிடிக்கும் மீன்கள் பறிமுதல் கண்டித்து நாகை, கடலூரில் கொந்தளிப்பு:பெண்கள் தீக்குளிக்க முயற்சி: கடலில் இறங்கி போராட்டம்

நாகை: சுருக்குமடி வலையால் பிடிக்கும் மீன்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகளை கண்டித்து நாகையிலும், தடையை எதிர்த்து கடலூரிலும் மீனவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளில் நாகை மாவட்ட மீனவர்கள் பிடித்து வரும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை கடந்த 15 நாட்களாக மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். இதை கண்டித்து நாகை நம்பியார்நகர் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும், மீன்வளத்துறை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

அதன்படி, நாகை நம்பியார் நகரில் நேற்று 1,500 மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் னவபஞ்சாயத்தார்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. அதிகாரிகள் ஜீப்பில் ஏறி புறப்பட்டபோது ஜீப்பை முற்றுகையிட்ட சில பெண்கள் உடலில் மண்ணெண்ெணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் குடும்பத்துடன் பேரணியாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதில் தடுப்பு கட்டைகளை தாண்டி செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே மீனவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்ததால் எஸ்.பி. செல்வநாகரத்தினம், ‘கலெக்டரை சந்தித்து பேசி தீர்வு காணலாம்’’ என்று கூறி சமரசம் செய்து அனுப்பினார். சுருக்குமடி வலைகள் மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி கடலூர் தேவனாம்பட்டினத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மீனவர்கள் குடும்பத்தோடு கருப்பு கொடியேந்தி கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் பூம்புகார்  பஸ் நிலையம் அருகே ஏராளமான மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Tags : riots ,Women ,Nagai ,Cuddalore ,sea , Shrinkage, Fish Seizure, Naga, Cuddalore, Women, Struggle
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...