×

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ள நிறுவனம் பதிவு பெற்றதா? அரசுக்கு தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ள நிறுவனம் பதிவு பெற்ற நிறுவனமா? இல்லையா? என்று அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் உண்மை தன்மை குறித்து  முதல்வர் அலுவலகத்தில் அச்சங்கத்தின் செயலாளர் கார்த்திக் அளித்துள்ள புகார்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க இபாக்ஸ் என்ற நிறுவனம் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் பதிவு செய்யப்படாத நிறுவனம். இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இபாக்ஸ் காலேஜ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் கல்லூரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கல்விப்பணிகளில் தலையிட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 11 ஆயிரம் பள்ளிகள் தான் இருக்கின்றன. இவற்றில் 5 ஆயிரம் பள்ளிகளில் தான் பிளஸ் 2 மாணவர்கள் படிக்கின்றனர். அதிலும் 7 ஆயிரம் பேர் தான் நீட் பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில், பதிவு பெறாத நிறுவனத்தை ஏன் ஒப்பந்தம் செய்தனர் என்பது குறித்து முதல்வர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தது.Tags : company ,school ,Government , Government School Students, NEET Training, Institution Registration, Private College Teachers Association
× RELATED அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டிப்பு