×

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2 மாத சம்பளம் வருமா?

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 2 மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் முதல்கட்டமாக 2,423 பேரும், இரண்டாம் கட்டமாக 1,661 பேரும் தொகுப்பு ஊதியத்தின் கீழ் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதாமாதம் 15 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. அதாவது ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்நிலையில் முந்தைய கல்வியாண்டில் ஏப்ரல் மாதத்துக்கும் சேர்த்து மொத்தமாக 11 மாதங்கள் வழங்கப்படுகிறது. இதன்படி கடந்த மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம்  அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் இருந்து அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதையடுத்து, எப்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதனால் விரிவுரையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கான சம்பளத்தையும், மே மாதம் பணியாற்றியதற்காக சிறப்பு ஊதியத்தையும் வழங்க வேண்டும். இது குறித்து பல முறை உயர்கல்வித்துறைக்கு தெரிவித்தும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் இம்மாத இறுதியில் போராட்டம் நடத்தப் போவதாக கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : lecturers , Honorary Lecturers, 2 months salary
× RELATED அதிமுக ஆட்சி காலத்தில் அதிகார...