×

பெங்களூருவில் என்ஐஏ சுற்றிவளைப்பு: தங்க ராணி சொப்னா சிக்கினார்: கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பதுங்கியிருந்தபோது பிடிபட்டார்

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த சொப்னாவை பெங்களூருவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவத்தில் தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் கைது செய்யப்பட்டார். வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷை சுங்க இலாகாவினர் தேடி வந்தனர். ஆனால் சொப்னா மற்றும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் நாயர் தலைமறைவாகினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கை ேதசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்றது. தொடர்ந்து சரித் குமார், சந்தீப் நாயர், சொப்னா சுரேஷ், பைசல் பரீத் ஆகியோர் மீது என்ஐஏ உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ெசய்தது. முன் ஜாமீன் கோரி சொப்னா கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பின் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து சொப்னாவை சுங்க இலாகாவினரும் என்ஐஏயும் தேடி வந்தனர். இந்நிலையில் இவர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு போன் மூலம் ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி என்ஐஏ அதிகாரிகள் நேற்று பெங்களூரு சென்றனர். கோரமங்களா பகுதியில் பதுங்கி இருந்த சொப்னா சுரேஷ், கணவர் மற்றும் 2 குழந்தைகளை பிடித்தனர். 4 பேரையும் இன்று கொச்சி ெகாண்டு வருகின்றனர். இதற்கிடையே சந்தீப் நாயரும் கைதானதாக கூறப்படுகிறது. அவரும் இன்று கொச்சி கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களிடம் நடத்தும் விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.


Tags : Sopna ,siege ,Bangalore ,NIA ,ambush ,children ,Queen , Bangalore, NIA, Golden Queen Sopna
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை