×

முட்டை விலை 10 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசு உயர்ந்து, 350 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில், நேற்று முட்டை விலை மேலும் 10 காசுகளை என்இசிசி உயர்த்தியது. இதன் மூலம் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 340 காசில் இருந்து 350 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், முட்டை விலையில் 10 காசு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 காசு உயர்த்தப்பட்டுள்ளது. முட்டை விலையை என்இசிசி உயர்த்தினாலும், வியாபாரிகள் சங்கம் அதில் 30 காசு குறைத்துள்ளது. இதனால் பண்ணைகளில் ஒரு முட்டை 320 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

Tags : Egg ,prices rise
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...