×

கொரோனாவுக்கு மருத்துவர் பலி

சென்னை: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (71), மருத்துவரான இவர், தனது வீட்டில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது 29ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், மருத்துவரின் மனைவி, மகன், மருமகள்  உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இவரது உடல் மாநகராட்சி மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்டது.


Tags : Doctor ,Corona , Doctor kills, Corona
× RELATED போலி டாக்டர் கைது