×

பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை: சிறைத்தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 2 - 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றோருக்கான சிறை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அதிக, குறைந்த தண்டனை பெற்றோருக்கு ஒரே மாதிரியான பரோல் விதியால் கைதிகளின் உரிமை பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடத்தல் சம்பவத்தில் 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவருக்கு பரோல் கோரிய வழக்கில் பரிந்துரை செய்துள்ளது. கைதிகள் 2 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகே பரோல் வழங்க வேண்டுமென சிறை விதி உள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை கைதிகள், ஒரு மாதம் அல்லது 2 மாதம் பரோல் பெற்று வெளியில் செல்கின்றனர். அதுவும், நோய் சிகிச்சை, பெற்றோர் மரணம், குடும்பத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரை பார்ப்பதற்கு, திருமணம், போன்ற விஷயங்களுக்குதான் பரோல் வழங்கப்படும்.  ஆனால், பரோல் காலம் முடிந்தபின், அவர்கள் சிறைக்கு திரும்ப வேண்டும். மேலும் பரோல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல  கூடாது. ஆனால், பரோலில் வெளியே செல்லும்  பலர் உடனடியாக சிறைக்கு திரும்புவதில்லை. தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை போலீசார் தேடி கண்டுபிடித்து சிறையில் அடைக்கின்றனர். சிலரை கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்நிலையில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : High Court ,government ,Tamil Nadu , Parole, imprisonment
× RELATED தமிழகம் முழுவதும் கல்வி...