×

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 13,000 கனஅடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கான நீர்திறப்பு 15,000 கனஅடியிலிருந்து 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை பகுதி வரை சென்றடைந்ததை அடுத்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 40.45 டிஎம்சியாகவும் உள்ளது.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதி மூடப்படும். இந்த கால கட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு பின்னர் கல்லணை திறக்கப்பட்டது. பெரும்பான்மையான ஆறு வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கால தாமதமாக தண்ணீர் குறைந்த அளவே வருவதால் குறுவை சாகுபடி தொடக்கத்திலேயே விவசாயிகள் சோதனையை சந்தித்துள்ளனர்.



Tags : Mettur Dam , Mettur Dam, Water supply
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி