ரூ.30,062 கோடி முதலீடு பெற்றுள்ள ரிலையன்ஸ்: செபியில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தகவல்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளிநாடுகளை சேர்ந்த 11 நிறுவனங்களிடம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களின் படி நான்கு நிறுவனங்களிடம் இருந்து ரூ.30,062 கோடியை முதலீடாகப் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,17,588 கோடியை முதலீடாகப் பெற்றுக்கொண்டு அதன் 25.09% பங்குகளை விற்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் ஃபேஸ்புக் நிறுவனமும் அடங்கும்.

இந்நிலையில் எல் கேட்டர்ட்டன், பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட், சில்வர் லேக், ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நான்கு நிறுவனங்களிடம் இருந்து ரூ.30,062 கோடியை பெற்றுக்கொண்டு அவற்றுக்கு 6.13% பங்குகளை ஒதுக்கியுள்ளதாக செபி அமைப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோவில் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் ரூ.43,574 கோடிக்கு விற்பனை செய்துவிட்டது. தற்போது எல் கேட்டர்டன் நிறுவனத்திடம் ரூ.1,894.50 கோடிக்கு 0.39% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தி பப்ளிக் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் நிறுவனத்திடம் ரூ.11,367 கோடிக்கு 2.32 % பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு முன்னணி முதலீட்டாளரான சில்வர் லேக் நிறுவனத்திடம் ரூ.10,202.55 கோடிக்கு 2.08% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ரூ.6,598.38 கோடிக்கு 1.34% பங்குகளை வாங்கியுள்ளது.

Related Stories:

More
>