×

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.78% : மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.78% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 5.15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 8,47,506 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,15,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 22,598 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் மொத்தம் 1,27,28,000 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,89,000 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,65,565 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.Tags : India ,Federal Ministry of Health ,Corona , Corona, India
× RELATED இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்