×

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை கண்காணிக்க குழு அமைப்பு

சென்னை: சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி, மீன் அங்காடிகளை  கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் அளித்துள்ளார்.

கிருமிநாசினி தெளிப்பு, சமூக இடைவெளி, நேரக் கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற கடைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

அபராதத்துடன் 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலையம் மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Team ,shops ,Chennai ,grocery stores , Chennai, vegetable, grocery stores, meat, fish
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...