சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் பிரதமர் லீ ஸெய்ன் லூங் மீண்டும் வெற்றி; பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து...!!!

டெல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதற்கிடையே, பிரதமர் லீ செய்ன் லுாங் ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே பொதுத் தேர்தலை அறிவித்தார். இதன்படி, நேற்று சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காலை  முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தொடர்ந்து, பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்  கொண்டது. மக்கள் செயல் கட்சி, 61.24% விகிதம் பெற்றது. கடந்த 2015-ம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 69.9% குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான வொர்க்கர்ஸ் பார்ட்டி கட்சி 10 இடங்களில் வெற்றி  பெற்றது. 1950ம் ஆண்டின் இறுதியில் இருந்து மக்கள் செயல் கட்சி தொடர்ந்து வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு

சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங்கிற்கு வாழ்த்துக்கள். அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக சிங்கப்பூர் மக்களுக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: