×

2ம் கட்ட நிவாரண நிதி வழங்கக்கோரி விஏஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை:ரேஷன் கடைக்கும் பூட்டு: பொன்னேரி அருகே பரபரப்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே இரண்டாம் கட்ட நிவாரண நிதி 1000  வழங்ககோரி நியாய விலைக் கடையை பூட்டி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2ம் கட்ட நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 வழக்குவதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 2. நியாய விலைக்கடைகளில் கடந்த மாத இறுதியில் குடும்ப அட்டைதாரர்கள் சிலருக்கு 1000 வழங்கப்பட்டு பின்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி நேற்று மதியம் அப்பகுதி பொதுமக்கள் நியாய விலைக்கடையை பூட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ெதாடர்ந்து, “2ம் கட்ட கொரோனா நிவாரணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. எனவே அனைவருக்கும் கொரோனா நிவாரணம் உடனடியாக  வழங்க வேண்டும்” என வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டம் நடத்திய பொதுமக்கள்  போராட்டத்தை கைவிட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office ,Ponneri ,VAO , VAO Office, Public Siege, Ration Shop, Ponneri
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...