கொரோனா வார்டில் சாப்பாடு சரியில்ல...நோயாளிகள் மட்டுமல்லநர்ஸ்களும் போராட்டம்...

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் நர்ஸ்கள் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால், மருத்துவமனையிலேயே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு தரமின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட செவிலியர்கள் சில தினங்களுக்கு முன் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி, செவிலியர்களுக்கு விரோதமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியை புறக்கணித்து, மருத்துவமனை வாயிலில் அமர்ந்து நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதன்பின்னர் மருத்துவமனை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.  கொரோனா வார்டுகளில் வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை என்று நர்ஸ்கள் போராடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>