×

இந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் முழுமையாக படைகளை வாபஸ் பெற முடிவு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்திய, சீன எல்லையில் இருதரப்பு ராணுவமும் படைகளை குவித்தன. இதனால் போர் பதற்றம் நிலவியது. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 3 நாளில் சர்ச்சைக்குரிய 3 இடங்களில் இருந்து சீனா தனது படைகளை முழுமையாக வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.

இதில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் இருந்து முழுவதுமாக படைகளை வாபஸ் பெறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags : talks ,Ladakh ,China ,India ,troops , India, China, East Ladakh, troops withdraw
× RELATED பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக...