×

கொரோனாவால் இறந்த 3 பேர் உடல்கள் ஜேசிபி மூலம் குழியில் வீசி அடக்கம் : ஆந்திராவில் மீண்டும் அரங்கேறிய அவலம்

திருமலை:  ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் உடலை ஜேசிபி மூலம் குழியில் வீசி அடக்கம் செய்த அவலம் மீண்டும் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதித்து இறந்த எடை அதிகமுள்ள நபர் ஒருவரை ஜேசிபி மூலம் குழிக்குள் வீசி அடக்கம் செய்தனர். அதேப்போல் தற்போது நெல்லூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன்படி நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.  

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று அதிகாலை அவர்களுடைய உடல்களை அங்குள்ள பென்னா நதிக்கரைக்கு  நகராட்சி ஊழியர்கள் மூலம் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். பின்னர், நகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திர தொட்டியில் உடல்களை தூக்கி  வீசினர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி சென்ற டிரைவர் அங்கு ஏற்கனவே தயாராக வெட்டி வைத்திருந்த குழியில் 3 பேரின் உடல்களை கொட்டினார். பின்னர் மண்மூடி அடக்கம் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : tragedy ,pit ,Andhra Pradesh ,JCP ,JCB , Corona, Bodies, JCP, Andhra
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி