அமெரிக்கா, உக்ரைனில் தவித்த 500 பேர் மீட்பு: சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர்

மீனம்பாக்கம்:  ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பலர் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் ஒன்று டெல்லி வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்தது. அதில் 13 ஆண்கள், 9 பெண்கள் வந்தனர்.  மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஒருவர் தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரிக்கும், 21 பேர் ஓட்டலுக்கும் அனுப்பி தனிமைப்படுத்தபட்டனர். அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு 150 பேருடன் டெல்லி வழியாக சென்னை வந்தது. அவர்களில் 66 ஆண்கள், 70 பெண்கள், 14 சிறுவர்கள். அவர்களில் 4 பேர் தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரிக்கும், 146 பேர் ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து மற்றொரு ஏர் இந்தியா மீட்பு சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 178 பேருடன் சென்னை வந்தது. அவர்களில் 110 ஆண்கள், 54 பெண்கள், 12 சிறுவர்கள், 2 குழந்தைகள். அதில் 80 பேர் தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரிக்கும், 98 பேர் ஓட்டல்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேப்போல், உக்ரைன் நாட்டில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று காலை 150 பேருடன் சென்னை வந்தது. அவர்களில் 102 ஆண்கள், 48 பெண்கள்.

அனைவரும் உயர்கல்விக்காக சென்ற மாணவர்கள். அவர்களில் 116 பேர் தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரிக்கும், 34 பேர் ஓட்டலுக்கும் அனுப்பி தனிமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories:

>