×

அதிகாரிகளால் வணிகர்களுக்கு தொல்லை தரப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்: முதல்வருக்கு விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடை திறந்து, மூடும் நேரத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகளின் தலையீடு உள்ளது.வாழ்வாதாரம் தொலைந்து நிலை குலைந்துள்ள வணிகர்கள் மீது அபராத விதிப்பும், கடை திறப்பு நேரத்தைக் குறைத்தும், சில இடங்களில் குறிப்பாக சென்னையில் கடையைப் பூட்டி காவல்துறை அதிகாரிகள் சாவியை கையிலெடுத்துச் சென்றதும் மிகவும் வேதனைக்குரிய செய்தியாக உள்ளது. தமிழக முதல்வர் அறிவிப்புகள் வெளியிட்டு இனியும் ஊரடங்கு அமல்படுத்த முடியாது. அனைவரின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலப் பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது என்பதை தெளிவாக அறிவித்த பின்னரும் அதிகாரிகளின் அத்துமீறல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த அத்துமீறல் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி நிலைமை கைமீறிப் போகும். மேலும் வணிகர்கள், பொதுமக்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் அரசு மீது வெளிப்படுத்தும் நிலையும் உருவாகி விடும். எனவே தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லைகள் துயரங்களை தவிர்த்திட அறிவுறுத்திட வேண்டும்.

Tags : traders ,Chief Minister ,Wickramarajah ,Wickremarajah , Merchants, Chief, Wickramarajah
× RELATED வணிகர் தின மாநாடு முன்னிட்டு நாளை...