×

கோவளம் கடற்கரையில் நெமர்டியன் புழு இனம்: சத்யபாமா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சென்னை: ஆராய்ச்சி நிறுவனங்களான சத்யபாமா பல்கலைக்கழகம், ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ், ஸ்மித் சோனியன் இன்ஸ்டிடியூஷன், அமெரிக்கா ஆகிய விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் ஒரு புதிய இன நெமர்டியன் புழு (டெட்ராஸ் டெம்மா ப்ரீயே) கோவளம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய புழு இனம் ஒரே நேரத்தில் ஹவாய் மற்றும் இந்தியாவில் (குறிப்பாக சென்னை, கோவளம் கடற்கரையில் பாறை நிறைந்த இடத்தில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் புகழ்பெற்ற சர்வதேச ஜூடாக்ஸா இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புழு வெளி மற்றும் உள் உருவ அமைப்பின் அடிப்படையில் புதிய இனம் இன்று அடையாளம் காணப்பட்டதாக சத்யபாமா ஆராய்ச்சி அறிஞர்கள் விக்னேஷ் மற்றும் ருச்சி கூறியுள்ளனர்.

இந்திய கடலோர பகுதியில் நெமர்டியன் பல்லுயிரியலை ஆவணப்படுத்த தீவிர ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், எதிர்கால ஆய்வுகளுக்கான  குறிப்புகளை நாங்கள் தரப்படுத்தி உள்ளோம், என்று சத்யபாமா விஞ்ஞானி ராஜேஷ் கூறியுள்ளார். இந்த பதிவில் முதன்முறையாக உருவவியல் மற்றும் டிஎன்ஏ குறிப்பான்களை இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாண்டு இந்த புதிய இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சத்யபாமா இளம் விஞ்ஞானி டாக்டர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Tags : Nemerdian ,Kovalam beach ,scientists ,Satyabhama ,worm race ,Nemertian ,Satyabama ,coast , Kovalam Beach, Nemertian worm race, Sathyabama scientists
× RELATED பல பிரமாண்ட வசதிகளுடன் மெரினா, பெசன்ட்...