பத்திரப்பதிவுத்துறையில் 5 சார்பதிவாளர்கள் அதிரடி மாற்றம்

சென்னை: ஐந்து சார்பதிவாளர்களை பணிமாறுதல் செய்து பதிவுத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த 5 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி, குன்றத்தூர் சார்பதிவாளர் முத்துச்சாமி சாத்தூர் சார்பதிவாளராகவும், திருத்துறைப்பூண்டி சார்பதிவாளர் கண்ணன் நீலாங்கரை சார்பதிவாளராகவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சார்பதிவாளர் நவீன் குன்றத்தூர் சார்பதிவாளராகவும், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் தாணுமூர்த்தி திருவொற்றியூர் சார்பதிவாளராகவும், ராமநாதபுரம் இணை 2 சார்பதிவாளர் இளங்கோவன் வெளிப்பட்டினம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக சார்பதிவாளர் அளவில் பணியிடமாற்றம் செய்ய ஐஜியே உத்தரவுகளை பிறப்பிப்பார். ஆனால் கொரோனா காலம் என்பதால் தமிழக அரசு பொது மாறுதலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இதனால் நிர்வாக காரணங்களுக்காக பணிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், சார் பதிவாளர்களுக்கு துறையின் செயலாளரும், துணை பதிவாளர்களுக்கு முதல்வர் அலுவலகமும் அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன்படி சார் பதிவாளருக்கு நிர்வாக காரணங்களால், துறையின் செயலாளர் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>