×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்த டாக்டருக்கு பிளாஸ்மா தானம்: சென்னை வாலிபருக்கு பாராட்டு குவிகிறது

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்த டாக்டருக்கு பிளாஸ்மா தானம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபருக்கு பாராட்டு குவிகிறது.
சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சமூக வலைதளங்களில் கோரிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திருவள்ளூரை சேர்ந்த மருத்துவரான தனது உறவினர் ஒருவர் கோவிட்-19 பாதிப்புக்குள்ளாகியுள்ளார். அவர் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோய் தொற்று பாதிப்பு அதிகமாகி அவரது உடல்நிலை படிப்படியாக மோசமாகி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார். அவரை காப்பாற்ற தற்போதைய நிலையில் அனைத்து வகையான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயின் தாக்கத்தை குறைக்க கடைசியாக பிளாஸ்மா சிகிச்சைக்கு திட்டமிடுவதாக தெரிவித்திருந்தார். இதனால், ‘ஓ-பாசிடிவ்’ குரூப் ரத்த வகை கொண்ட கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமானவர்கள் யாரேனும் ஒருவர் பிளாஸ்மா தானத்திற்கு முன்வந்து உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், மருத்துவரின் கோரிக்கையை சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி அமீர் என்பவர் ஏற்றார். அவர் அண்மையில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். பின்னர் அவர் தன்ைன அனைத்து வகையான சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு பிளாஸ்மா தானம் செய்தார். அமீரின் மனிதநேய சேவைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


Tags : doctor ,teenager ,Chennai , Corona, Health, Doctor, Plasma Donation, Chennai Youth
× RELATED பூசணி விதையின் பயன்கள்!