×

இந்தியாவில் இன்றும், நாளையும் வானில் தெரியும் வால்நட்சத்திரம்: வெறும் கண்களால் பார்க்கலாம்

* வால்நட்சத்திரத்துக்கு நியோவைஸ் அல்லது கோமெட் 2020என்று பெயர்.
* பிரான்சில் கடந்த 8ம் தேதி மாலை நேரத்தில் வால் நட்சத்திரம் தெரிந்துள்ளது.
* இன்று அதிகாலை மிக உயரத்தில் தெரியும்.
* நாளை மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும்.
* இதை இந்தியா முழுவதும் இருந்து பார்க்க முடியும்.

வாஷிங்டன்: இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் வானத்தில்  வால்நட்சத்திரம் தெரியும் என்றும் இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். செல்போன், டிவி என பார்த்து பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் சற்று நேரம் அவர்களுக்கு ஆறுதலை கொடுத்து வெளியே வரசெய்து கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இன்று வானத்தில் இருந்து வால்நட்சத்திரம் தெரியும் என சர்வதேச விண்வெளிமையமான நாசா தெரிவித்துள்ளது.  இந்த வால்நட்சத்திரத்துக்கு நியோவைஸ் அல்லது கோமெட் 2020 என பெயரிடப்பட்டுள்ளது. முதன் முதலில் பிரான்ஸ் நாட்டின் மாண்ட்லுகன் பகுதியில் கடந்த 8ம் தேதி சூரியன் மறைந்த பின்னர் மாலை நேரத்தில் வால் நட்சத்திரம் தெரிந்துள்ளது. இந்த காட்சியை நாசா வெளியிட்டுள்ளது.

பூமிக்கு அருகில் பெரிய அளவில் புறஊதா கதிர்களின் ஆற்றல் பரவல் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு நியோவைஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக நாசா விளக்கமளித்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து பகுதிகளில் வால் நட்சத்திரம் தெரிந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது- வால்நட்சத்திரம் நியோவைஸ் 22ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும். பூமியில் இருந்து சுமார் 103மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். இது கடந்த மார்ச் 27ம் தேதி நாசாவின் எக்ஸ்போரர் தொலைநோக்கி மூலமாக கண்டறியப்பட்டது. கடந்த 3ம் தேதி வால்நட்சத்திரமானது சூரியனுக்கு அருகில் 43மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் கடந்து சென்றது.
 இது சூரியனுக்கும் புதனுக்கும் இடையிலான சராசரி தூரத்தை விட நெருக்கமானதாகும்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் விண்வெளி வீரர்கள் பாப் பெஹன்கென் மற்றும் ரஷ்ய வீரர் இவான் வாக்னர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். கடந்த 7ம் தேதி வால்நட்சத்திரமானது தொலைநோக்கியின் மூலமாக எளிதாக பார்க்க முடிந்தது. சிலர் வெறும் கண்களாலும் பார்க்கமுடிந்ததாக நாசா தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இன்று அதிகாலையில் நியோவைஸ் மிக உயரத்தில் இருப்பதை பார்க்கலாம்.
 நாளை வால்நட்சத்திரமானது சூரியன் மறைவுக்கு பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும். இதை இந்தியா முழுவதும் இருந்து பார்க்க முடியும்.

22ம் தேதி நியோவைஸ் பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது, பூமியில் இருந்து சுமார் 103 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இது இருக்கும்.  வால்நட்சத்திரம் அதன் நீளமான சுற்றுப்பாதையை முடிக்க சுமார் 6800 ஆண்டுகள் ஆகும். எனவே இதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது.



Tags : sky ,India , India, the star
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு