×

பாடப்பிரிவுகளில் முக்கிய பகுதிகள் நீக்கம் மு‌.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறிருப்பதாவது: அறிவியல் மற்றும் கலைப்புலப் படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்கப் பரிந்துரைத்திருப்பது எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியில் சரிசெய்ய முடியாத பாதிப்பினை ஏற்படுத்துவதோடு, உலக அளவில் போட்டியிடுவதற்கான நமது திறனையும் குறைத்து விடும். இம்முடிவினைக் கைவிட்டு, அனைவரும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியாலை கேட்டுக் கொள்கிறேன்.


Tags : removal ,MK Stalin , Courses, M.K. Stalin
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...