×

சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.டி நிறுவனங்கள் 13ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்: அரசு அனுமதி

சென்னை: பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 13ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 25.3.20 முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதை தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.  அதன்படி, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் வருகிற 13ம் தேதி (திங்கள்) முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், இதில் 90% பணியாளர்கள் அந்த நிர்வாகம் ஏற்பாடு செய்யும் போக்குவரத்து வசதிகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : IT companies ,areas ,Chennai Police: Government Permit ,police boundary ,Chennai , Chennai, Police Border, IT Companies
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்