×

முதல்வருக்கு கவுரவ பட்டம்: அரசு தகவல்

சென்னை: குடிநீர், சுகாதாரம், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க நாட்டின், சிகாகோ நகரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் The Rotary Foundation of Rotary International அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு, ‘PAUL HARRIS FELLOW’ என அழைத்து கௌரவப்படுத்தி வருகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமியின்  சேவையை பாராட்டி இவ்வமைப்பு ‘PAUL HARRIS FELLOW’  என கௌரவப்படுத்தியுள்ளது. இத்தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.


Tags : Chief, Honorary Degree, Government
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...