×

பெரியகுளம் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி தீவிரம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. வருடந்தோறும் மத்திய அரசு சார்பில் ஒரு கிலோ நெல்லிற்கு 50 பைசா விலை ஏற்றம் செய்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் 25 பைசா விலை ஏற்றம் செய்வது வழக்கம்.

தொடர்ந்து மத்திய அரசு நெல்லிற்கு விலை ஏற்றம் செய்து வரும் நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழக அரசு  நெல்லிற்கு விலையை உயர்த்தவில்லை. தமிழக அரசு முறையாக விலையை உயர்த்திருந்தால் ஒரு கிலோ நெல் ரூ.21க்கு விற்பனையாகி இருக்கும். விலை உயர்தாததால் ரூ.19.50க்கு விற்பனையாகிறது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : area ,Periyakulam ,paddy harvesting , Large field, paddy harvest, work intensity
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்