×

திருச்சி அருகே சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில் கைது

திருச்சி: திருச்சி அருகே சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில்(24) கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதவத்தூர் பாளையத்தில் எரிந்த நிலையில் சிறுமியின் உடலை மீட்ட போலீஸ் தீவிர விசாரணை நடத்தியது. சிறுமியின் கையில் தான் கட்டிய கயிற்றை செந்தில் அறுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கையில் கட்டிய கயிற்றை அறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமி மிரட்டியதாக தகவல் தெரிய வந்துள்ளது. கையில் கட்டிய கயிற்றை அறுத்ததால் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் மீது ஐ.பி.சி சட்டம் 305-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே, 14 வயது சிறுமி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி. குப்பை கொட்டுவதற்காக பிற்பகலில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பாத நிலையில், காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அவர்களின் வாகனங்களை மறித்து இளம்பெண்ணின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை வேண்டும் எனவும், சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.Tags : Senthil ,cousin ,Trichy Trichy ,suicide , Trichy, little girl, suicide, cousin, arrested
× RELATED சிறுமியிடம் பலாத்கார முயற்சி வாலிபர் கைது