×

மறைந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு 100-வது பிறந்தநாளை முன்னிட்டு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு!!!

சென்னை:  மறைந்த முன்னாள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நெடுஞ்செழியனுக்கு சிலை நிறுவப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளனர். இரா. நெடுஞ்செழியன் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில்,  1920ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இரா. நெடுஞ்செழியன் தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார்.

இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். மேலும், இவர் நாவலர் என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார். இரா. நெடுஞ்செழியன் பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுதே, இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1944ம் ஆண்டு அதில் சேர்ந்தார். பின்னர், பேரறிஞர் அண்ணா, 1949ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய பொழுது, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் இவர் திகழ்ந்தார். 1949 முதல் 1957 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழுச் செயலாளராக இருந்து வந்தார்.

இதன்பின் அதிமுகவில் இணைந்த இவர் இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். அதன்பின் இவர் 2000ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி காலமானார். இந்நிலையில், மறைந்த முன்னாள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நெடுஞ்செழியனின் பிறந்த நாளான ஜூலை 11ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், நெடுஞ்செழியனின் வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் என்ற தன் வரலாற்று நூலை அரசுடைமையாக்கவும் முடிவு செய்துள்ளார்.

Tags : government ,Nedunjeriyan ,Tamil Nadu ,birthday ,novelist ,Bronze , Naval Nedungezhiyan, Birthday, Bronze Launch, Government of Tamil Nadu
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...