×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்திலும் பரவலாக  மழை பெய்தது. இருப்பினும் தமிழகத்தில் நிலவிய வெயிலால் வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக  மழை பெய்தது. சில  இடங்களில் இயல்பை மீறிய மழையும், சில இடங்களில் இயல்பைவிட குறைவான மழையும் பெய்துள்ளது. அதே நேரத்தில் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் அதிகபட்ச வெயில் கொளுத்திய நிலையில்  தற்போது மீண்டும் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.Tags : Government of Tamil Nadu ,Government ,Tamil Nadu , Monsoon, Tamil Nadu Government
× RELATED ஜிம் உள்ளே செல்ல வெளியே வர தனிப்பாதை:...