×

கோவை மாநகராட்சி சார்பில் இன்று மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்

கோவை: கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முதல் மாநகராட்சி பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மருத்துவ முகாம்கள் நடக்கும் இடங்கள்: வடக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் பீளமேடு-தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி-கருப்பராயன்பாளையம், நீலிக்கோணாம்பாளையம்-எம்.வி.கே.வீதி, கணபதி மாநகர்- ராகூரத்தினம் வீதி, கணபதி-தில்லைநகர் மன்றம், துடியலூர்-அண்ணா காலனி, வெள்ளகிணர்-ஸ்ரீவர்சா கார்டன் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தெலுங்குபாளையம்-கிரீன் பார்க் செல்வபுரம், செல்வபுரம்-வடக்கு யூனிட், குனியமுத்தூர்-பள்ளி வீதி, ராமசெட்டிபாளையம், போத்தனூர் ஸ்ரீராம் நகர், குறிச்சி-ஈச்சனாரி, தொண்டாமுத்தூர்-சத்யா நகர் ஆகிய இடங்களில் நடக்கிறது.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ராம்குர்பாய் அம்மாள் லாலி ரோடு, மீனாட்சி ஹோம் சண்முகாநகர், கே.கே.புதூர் அண்ணா நகர் வேளாண்டிபாளையம், கவுண்டம்பாளையம்-அசோக் நகர், மேல்பகுதி, சீரநாயக்கன்பாளையம்-நேதாஜிவீதி, கல்வீராம்பாளையம்-பொம்மனாம்பாளையம் தெற்கு, வடவள்ளி-கூத்தாண்டவர் கோவில் வீதி ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிங்காநல்லூர்,  நஞ்சுண்டாபுரம்-கதிரவன் நகர், சாரமேடு சௌரிபாளையம்-பாரதி புரம், உப்பிலிபாளையம்-என்.ஜி.ஆர் காலனி, வரதராஜபுரம் மேடு, ராமநாதபுரம்-கருணாநிதி நகர் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. மத்திய மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீதாலட்சுமி-சண்முகா நகர், பட்டுநூல்-உப்பாரவீதி, ஜெயில் ரோடு-நியூ சிற்றம்பலம்  லே-அவுட், பி.என் பாளையம், ரத்தினபுரி-சாமி காலனி, ராஜவீதி-புல்லுகாடு, யூனிட், சி.டி.எம் ஹோம்-காந்திபுரம் 3 மற்றும் 4-வது வீதி, வாலாபாய் வந்தீராவன்-பெரியகடைவீதி ஆகிய இடங்களில் நடக்கிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 32 இடங்களில் நேற்று நடந்த மருத்துவ முகாம் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த மருத்துவ முகாமில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் 286 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. மக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துகளும் வழங்கப்பட்டன’’ என்றார்.

Tags : camps ,Corporation of Coimbatore ,Coimbatore , On behalf of the Corporation of Coimbatore The places where medical camps take place today
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு