×

ஆதார் பதிவு செய்யும் இடத்தில் சமூக இடைவெளி மறந்த மக்கள்

கரூர்: ஆதார் பதிவுசெய்யும் இடத்தில் சமூகஇடைவெளியின்றி மக்கள் நின்றிருந்தனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான மையம் செயல்படுகிறது.

தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு தொடர்பாக இந்த மையத்திற்கு வருகின்றனர். நேற்று சமூக இடைவெளியின்றி கியூ வரிசையில் மக்கள் நின்றிருந்தனர். கைகழுவும் திரவம் எதுவும் வைக்கப்படவில்லை. இதுபோன்று பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்,

Tags : Aadhar , Aadhar is the place of registration People who have forgotten the social gap
× RELATED கடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல்...