×

6 அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிப்பறை கட்ட நிதி ஆணை

வலங்கைமான்: வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஆறு அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கழிவறைகள் கட்டுதல் மற்றும் பராமரித்தல் பணிகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜு தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் நல்லூர், கேத்தனூர், உத்தாணி, விளத்தூர் கடைத்தெரு, உத்தமதானபுரம் ஆகிய பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய நவீன கழிவறைகள் கட்டுவதற்கு பள்ளி ஒன்றுக்கு தலா ரூ.1.5 லட்சமும், அனைத்து பள்ளிகளிலும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.50 ஆயிரமும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் காசோலையாக வழங்கப்பட்டது.

Tags : Government Schools ,Persons , Modern Toilet Fund Orders for Disabled Persons in 6 Government Schools
× RELATED தையூர், இரும்பேடு அரசு பள்ளிகள் சென்டம்