×

டிக்டாக் செயலுக்கு மாற்றாக புதிய சில்5 செயலி அறிமுகம்!: திருப்பூர் பட்டதாரி இளைஞர்கள் அசத்தல்!!!

திருப்பூர்: திருப்பூர் பட்டதாரி இளைஞர்கள் சிலர் டிக்டாக் செயலுக்கு மாற்றாக சில்5 என்ற புதிய செயலியை உருவாக்கி அசத்தியுள்ளனர். வெங்கடேஷ், ஹரிஷ்குமார், சௌந்தரகுமார், சந்தீப் மற்றும் கோகுல் ஆகியோர் இணைந்து இச்செயலியை கண்டுபிடித்துள்ளனர். இந்தியா -  சீனா எல்லை பதற்றம் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதே நேரத்தில் சீன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மொபைல் போன் செயலிகள் தகவல்களை திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதற்கு மாற்றான செயலியை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், டிக்டாக் பயனாளர்களின் ஏக்கத்தை போக்க திருப்பூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி சில்5 என்ற பொழுதுபோக்கு செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

பார்ப்பதற்கு டிக்டாக் போலவே செயல்படும் இந்த செயலி வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளதாக அசத்தல் இளைஞர்கள் கூறுகின்றனர். அரசின் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த செயலியை உருவாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். டிக்டாக்கின் அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலியை, தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், இதன் சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பயனாளர்கள் தெரிவிக்கும் புகார்களை சரி செய்து செயலியை மேலும் மெழுகேற்றி வருவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Dictak ,youths ,chill5 ,Thirupur , Tiktok rival app - chill5 made by Thirupur youths
× RELATED 300 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி: ட்ரோன் உதவியுடன் மீட்பு