கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியதற்கு கைது செய்யப்பட்ட தணிகாச்சலத்திற்கு ஒரு வழக்கில் மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!!

சென்னை : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியதற்கு கைது செய்யப்பட்ட தணிகாச்சலத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

 வழக்கின் பின்னணி

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கொரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த மே 5ம் தேதி சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். 2 வழக்கில் கைது செய்யப்பட்ட தணிகாச்சலம் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

தணிகாச்சலத்திற்கு ஜாமீன்!!

இந்த நிலையில் முதல் வழக்கில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.சென்னையை விட்டு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் தணிகாச்சலத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும்  குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளதால் தணிகாச்சலத்தால் வெளியே வர முடியாது.

Related Stories: