×

கொரோனா தொற்று எதிரொலி: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்!!!

திருவள்ளூர்:  திருவள்ளூரில் போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 5877 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 3591ஆக உள்ளது.

தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2169ஆக உள்ளது. இதனால், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதில் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களை உடனடியாக கண்டறிந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதில் அதிகளவு பாதிக்கப்படுபவர்கள் காவலர்களே.  

ஏனெனில் அவர்கள் தடுப்பு பணிகளுக்காக சாலைகளில் அதிகளவு சுற்றி திரிவதால் தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இதுவரை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை மூட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன.  திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 117 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Closure ,Tiruvallur Regional Transport Office , Echo of Corona Infection: Tiruvallur Regional Transport Office Closed !!!
× RELATED பூண்டி‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்...