×

'பாக். விமானிகளின் 3ல் ஒரு பங்கு போலியானவர்கள்'.. பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து அமெரிக்காவும் தடை

வாஷிங்டன் : பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சிறப்புவிமானங்களை இயக்க பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டு இருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள் பலர், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதே பிரச்னைக்கு காரணம். பாகிஸ்தான் விமானிகளின் மூன்றில் ஒரு பங்கு விமானிகள் போலியானவர்கள் அல்லது முறைகேடாக தேர்ச்சி அடைந்தவர்கள் என்பது பாகிஸ்தான் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

போலி விமானிகளை பணி நீக்கம் செய்தும் அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து பாகிஸ்தான் விமானங்களுக்கு 6 மாத கால ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. தற்போது அமெரிக்காவும் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) கவலைகளை மேற்கோளிட்டு, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமான சேவையை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த மாதம் விமானிகளின் அலட்சியத்தால் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 97 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Tags : Pac ,pilots ,US ,flights ,Pakistani ,European Union ,airlines , Pakistan, International, Airlines, European Union, US, Prohibition
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...