×

உ.பி.யின் கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த விகாஸ் துபே போலீசாரால் சுட்டுக் கொலை: காரில் இந்ந்து தப்ப முயன்ற போது என்கவுனடர் என தகவல்

கான்பூர்: உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே உ.பி. போலீசால் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 8 போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விகாஸ் துபே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் இருந்து உ.பி.க்கு அழைத்து வரப்பட்ட போது என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். காரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விகாஸ் துபேவை கான்பூர் அழைத்துச் செல்லும் போது கார் கவிழ்ந்து விபத்து நேரிட்டது.  தப்பியோடிய விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரில் நேற்று பிடிபட்டார். கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர்.

அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான். உத்தரபிரதேசத்தில் விகாஸ் துபேவை கைது செய்ய முயன்ற போது டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலையப்பட்டார். பிரபல ரவுடி விகாஸ் துபேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டடிருந்தது. மத்தியப் பிரதேசத்திலிருந்து கான்பூர் செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது. மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். ஆனாலும் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தான். அங்குள்ள புகழ்பெற்ற மகாகாளி கோவிலுக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசார் விகாஸ் துபேயை கைது செய்தனர்.


Tags : UP ,Vikas Dubey ,Kanpur , Vikas Dubey, shot dead, police, Kanpur, UP
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை