×

நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கூரியரில் வந்த ரூ.16 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்

மீனம்பாக்கம்: நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் வந்த கூரியர் பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, நெதர்லாந்திலிருந்து சென்னை முகவரிக்கு வந்த ஒரு பார்சலில் மருந்து பொருட்கள், மிகவும் அவசரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நெதர்லாந்திலிருந்து ஏற்கனவே இதேபோல் மருந்து பொருட்கள் என்று வந்த பார்சல்களில் போதை மாத்திரைகள் இருந்ததால் அதிகாரிகளுக்கு இந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி, செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, போலியானவை என்பது தெரிந்தது. அந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அதில் லம்பார்கினி எனப்படும் 540 உயர் ரக போதை மாத்திரைகள் இருப்பது தெரிந்து. அவற்றை தனியாக எடுத்து வைத்தனர்.  இதன் சர்வதேச மதிப்பு ரூ.16 லட்சம். இந்நிலையில், நேற்று காலை விமான நிலைய வளாகத்தில் உள்ள வெளிநாட்டு பார்சல்களை கையாளும் பாரீன் போஸ்ட் ஆபீசுக்கு இரண்டு வெளிமாநில இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பார்சலை டெலிவரி எடுக்க வந்தனர்.அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Netherlands , In the Netherlands, Chennai, courier, Rs 16 lakh, drug pill, seized
× RELATED நெதர்லாந்திலிருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்