×

சிங்கப்பூரில் இன்று பொதுத்தேர்தல்

சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பால் முக்கிய நிகழ்வுகளை உலக நாடுகள் தள்ளிப்போடும் நிலையில், சமீபத்தில் தென் கொரியாவில் பொதுத்தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. நாட்டின் 26.5 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்நாட்டில் வாக்களிக்க வேண்டியது கட்டாயமாகும். 1950ம் ஆண்டின் இறுதியில் இருந்து மக்கள் செயல் கட்சி தொடர்ந்து வென்று வருகிறது. இம்முறை ஆளும் அரசு கொரோனா பாதிப்பை கையாண்ட விதம், 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி போன்ற விஷயங்கள் பிரதமர் லீ லோங்க்கின் வெற்றியை நிர்ணயிப்பதாக இருக்கும் என கணிப்புகள் கூறப்படுகின்றன.


Tags : elections ,Singapore , Singapore, today, general election
× RELATED இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான...